திறந்த பிடியாணை - பயணத்தடை: ஞானசார தேரர் தொடர்பில் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் திறந்த பிடியாணை ஒன்றை பிறப்பித்துள்ளது.
ஞானசார தேரருக்கு நீதிமன்ற அவமதிப்புக்காகச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பயணத் தடை
அத்துடன், ஞானசார தேரர் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் வகையில் பயணத் தடை ஒன்றையும் மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்துள்ளது.

இவ்விடயம் குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறும், பொலிஸ் மா அதிபர் ஊடாக இந்தத் திறந்த பிடியாணை உத்தரவை நடைமுறைப்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.