மக்களின் ஒத்துழைப்பை கோரும் நிதியமைச்சர் பசில்
நிதியமைச்சராக தனது அடிப்படை இலக்கு அரிசி உட்பட அத்தியவசிய பொருட்களின் விலைகளில் குறைப்பது எனவும் அதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் எனவும் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஒரு கிலோ அரிசியை கொள்வனவு செய்ய முடியாது பலர் பட்டினியில் இருக்கின்றனர் என்பதுடன் மூன்று வேளை சாப்பிட முடியாதவர்கள் அரசாங்கத்திற்கு வாக்களித்தனர்.
சாப்பிட முடியாமல் இருக்கும் மக்களுக்கு முதலில் சாப்பாட்டை வழங்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையிடம் கையிருப்பில் இருக்கும் 400 கோடி டொலர்களை சரியான முறையில் முகாமைத்துவம் செய்து, பொருளாதார பிரச்சினையை தீர்க்க முடியும்.
நாட்டில் போர் நடைபெற்ற காலத்தில் இலங்கையில் கையிருப்பில் 120 பில்லியன் டொலர்கள் மாத்திரமே இருந்தது.
டொலர் விலை அதிகரிப்புக்கு பொய்ப் பிரசாரமும் காரணமாக இருக்கின்றது எனவும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
நடிகை குஷ்புவா இது.. 20 வயதில் அடையாளம் தெரியாத அளவுக்கு எப்படி இருந்திருக்கிறார் பாருங்க! Cineulagam
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam