வீட்டுக்கு ஒரு விமானம் வைத்திருக்கும் மக்களை கொண்ட நாடு
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கேமரான் ஏர்பார்க் (Cameron Airpark) என்ற சிறிய கிராமத்தில் அலுவலகத்திற்குச் செல்ல ஒவ்வொரு வீட்டிலும் விமானத்தை வைத்துள்ளனர்.
விமான ஓட்டிகளுக்கான அனுமதி பத்திரம் மற்றும் விமானத்தை இயக்குவது பற்றிய முழுமையான விவரங்கள் தெரிந்தவர்களை தவிர, வேறு எவருக்கும் விமானத்தை இயக்க அதிகாரம் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டுக்கு ஒரு விமானம்
கேமரான் ஏர்பார்க்கில் வசிப்பவர்கள் மற்றும் விமானங்களை ஓட்டுபவர்கள் பெரும்பாலும் தொழில் ரீதியாக அல்லது ஓய்வுபெற்ற இராணுவ விமானிகளாக காணப்படுகின்றனர்.
இந்நிலையில், குறித்த கிராமத்தில் வசிக்கும் அனைவரும் தாங்கள் சொந்தமாக விமானங்களை வைத்திருப்பதை விரும்புகின்றனர்.
கமரூன் ஏர்பார்க் கடந்த 1963 ஆம் ஆண்டில் கட்டப்பட்டதுடன் இங்கே மொத்தம் 124 வீடுகள் அமைந்துள்ளன.
இதேவேளை, விமானங்களை வீடுகளுக்கு முன்பாக நிறுத்துவதற்கு வசதியாக இங்கு 100 அடி அகலத்திற்கு வீதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்கா விமானங்களின் செயல்பாட்டை ஊக்குவித்துள்ளது.
இதையடுத்து, விமான நிலையங்களை ஓய்வுபெற்ற இராணுவ விமானிகளுக்கான குடியிருப்பு விமானப் பூங்காவாக மேம்படுத்த அந்நாட்டின் விமானப் போக்குவரத்து ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் விளைவாகவே காமரூன் ஏர்பார்கில் வீட்டுக்கு ஒரு விமானம் நிறுத்தப்பட்டுள்ளது.

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
