வழிபாட்டு தளங்களில் ஒன்று கூடுவதற்கு தடை
வவுனியா இந்து ஆலயங்களில் நவராத்திரி பூஜையில் மூவருடன் வழிபாடுகளை மேற்கொள்ள முடியும் என்று வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அங்கு மேலும் தெரிவிக்கையில்,
இன்று வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட சுகாதாரத்துறையினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.
அரச சுற்றறிக்கையில் வழிபாட்டுத்தளங்களில் பொதுமக்கள் ஒன்றுகூடி வழிபாடுகளை மேற்கொள்வதற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும் மூவருடன் வழிபாட்டுத்தளங்களில் வழிபாடுகளை மேற்கொள்ள முடியும் என்ற ஒரு தகவல் வெளியாகியுள்ளது.இது அரச சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.
அத்துடன் இத்தகவல் உண்மைக்குப்புறம்பானது என்பதை தெளிவுபடுத்திய சுகாதாரத்துறையினர் பொதுமக்கள் ஆலய வழிபாடுகளில் அதனையும் மீறி ஒன்று கூடினால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேலும் தெரிவித்துள்ளனர்.





சேரன் எடுத்த திடீர் முடிவால் கண்ணீரில் சோழன், பாண்டியன், பல்லவன், நிலா... அய்யனார் துணை சோகமான புரொமோ Cineulagam

உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam

விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்.., நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை News Lankasri

Bigg Boss 9: நாளை பிரம்மாண்டமாக ஆரம்பிக்கவுள்ள பிக் பாஸ் சீசன் 9: கசிந்தது போட்டியாளர்கள் விபரம்! Manithan
