மியான்மரில் இருந்து தப்பிச்செல்ல முயன்ற 400 ஏதிலிகள் உயிரிழந்திருக்கலாம்: வெளியிடப்பட்டுள்ள அச்சம்
மியான்மரில் இருந்து கடல் மார்க்கமாக, தப்பிச்செல்ல முயன்ற 427 ஏதிலிகள், நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகம் இதனை தெரிவித்துள்ளது.
ஏதிலிகள் உயிரிழந்திருக்கலாம்...
2017ஆம் ஆண்டு முதல், மியான்மரில், முஸ்லிம் சிறுபான்மையினர், அந்த நாட்டு படையினரால் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதனால் அவர்களில் சிலர் கடல் மார்க்கமாக வேறு நாடுகளுக்கு தப்பி செல்கின்றனர்.
இந்தநிலையில், அண்மையில், நாட்டில் இருந்து தப்பிச்செல்ல முயன்ற ஏதிலிகளின் இரண்டு கப்பல்கள், கடலில் மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை
இதில், கடந்த 9ம் திகதி 267 பேருடன் சென்ற கப்பலில் இருந்து, 66 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று, 10ம் திகதியன்று, 247 பேருடன் சென்ற கப்பலில், 21 பேர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளனர்.
இந்தநிலையில், மீதமுள்ள 427 பேரின் நிலை பற்றி இதுவரை எந்த விபரமும் கிடைக்கவில்லை.
சம்பவங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை, முதற்கட்ட விசாரணையை ஆரம்பித்துள்ளது.
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri
பாரிஸ் அவசரக் கூட்டத்தில் பங்கேற்க மறுத்த ட்ரம்ப் - கிரீன்லாந்து விவகாரம் மீதான சர்ச்சை தீவிரம் News Lankasri
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam