இலங்கையில் தாக்கப்பட்ட வெளிநாட்டவர்! பொலிஸ் வெளியிட்டுள்ள உண்மை தகவல்
இலங்கையில் வைத்து, பிலிப்பைன்ஸ் நாட்டவர் ஒருவர், தாக்கப்பட்ட காணொளி தொடர்பில், பொலிஸ் தரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்படும், குறித்த காணொளியில், பிலிப்பைன்ஸ் நாட்டவர் ஒருவரை, இலங்கையர் ஒருவர் தாக்கும் காட்சி பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் 2024 பெப்ரவரியில் மாத்தறை வெலிகம பகுதியில் நடந்தது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் தரப்பு தகவல்
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பிலிப்பைன்ஸ் சுற்றுலாப் பயணி, கடந்த ஆண்டு பெப்ரவரி 14 ஆம் திகதியன்று, பெலேனா கடற்கரையில் வைத்து தாம் தாக்கப்பட்டதாக முறைப்பாடு ஒன்றை வழங்கியிருந்தார்.

இதனையடுத்து, 24 வயதான சந்தேக நபர், அதேநாளில் கைது செய்யப்பட்டு மாத்தறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும், சமூக ஊடகங்களில், இந்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றதைப் போன்று காட்டி, பொதுமக்களை தவறாக வழிநடத்தி, நாட்டின் நற்பெயருக்கு சேதம் விளைவிப்பதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan
ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் செய்துள்ள மாஸ் வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan