மீண்டும் சென்னை அணிக்கு திரும்பும் சுரேஷ் ரெய்னா
2026ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளாராக அந்த அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் வர்ணனையாளராக செயற்பட்ட ரெய்னா, இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சக வர்ணனையாளராக இருந்த ஆகாஷ் சோப்ரா, அடுத்த ஐபிஎல் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளரின் பெயர் 'S' எழுத்தில் ஆரம்பமாகுமா என கேள்வி எழுப்பினார்.
அதிவேக அரை சதம்
அதற்கு பதிலளித்த சுரேஷ் ரெய்னா, சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக அதிவேக அரை சதத்தை எடுத்த வீரர் பயிற்சியாளராக தெரிவு செய்யப்படுவார் என கூறினார்.
2014ஆம் ஆண்டு கிங்ஸ் 11 பஞ்சாப் அணிக்கெதிரான அரையிறுதிப் போட்டியில், சுரேஷ் ரெய்னா 16 பந்துகளில் 50 ஓட்டங்களை பெற்றார். இதுவே சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக ஒருவர் எடுத்த அதிவேக அரை சதமாகும்.
சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் மோசமான ஐபிஎல் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சத்தீஸ்கர் வெள்ளத்தில் சிக்கிய தமிழ் குடும்பம்! சுற்றுலா சென்றபோது 4 பேரும் உயிரிழந்த பரிதாபம் News Lankasri

இந்தியா மீது அணுகுண்டு வீச்சு... ட்ரம்பை கொல்ல வேண்டும்: அமெரிக்காவை உலுக்கிய சம்பவத்தில் பகீர் பின்னணி News Lankasri

துளியளவும் பந்தா இல்லாமல் விசேஷத்தை கொண்டாடிய சிவகார்த்திகேயன்.. மகிழ்ச்சியில் குடும்பத்தினர் Manithan

15 நாள் காதலன் வீட்டிலும், 15 நாள் கணவர் வீட்டிலும்.., மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றிய கணவர் News Lankasri
