சச்சினின் சாதனையை நெருங்கும் ரூட்
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோ ரூட்டுக்கு, இந்திய முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் டெஸ்ட் ஓட்ட எண்ணிக்கையை முந்த இன்னும் 2,916 ஓட்டங்களே தேவை என கணிப்பிடப்பட்டுள்ளது.
நட்டிங்ஹாமில் சிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான நேற்று(23) இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸில் 34 ஓட்டங்களை ரூட் பெற்றார்.
இதன் மூலம் 13,000 ஓட்டங்களை கடந்த ரூட், அந்த மைல்கல்லை வேகமாகக் கடந்த கிரிக்கெட் வீரராகவும் ஒரே இங்கிலாந்து கிரிக்கெட் வீரராகவும் மாறியுள்ளார்.
ஐந்தாவது வீரர்
அத்துடன், உலக டெஸ்ட் கிரிக்கெட்டில் 13,000 டெஸ்ட் ஓட்டங்களை கடந்த ஐந்தாவது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
சச்சின் டெண்டுல்கர்(15,921), ரிக்கி பொண்டிங்(13,378), ஜெக் கலிஸ் (13,289) மற்றும் ராகுல் டிராவிட்(13,288) ஆகியோர் குறித்த பட்டியலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
