இந்திய கடன் அடிப்படையிலான அத்தியாவசிய பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை: வெளியாகியுள்ள தகவல்
இந்திய கடன் அடிப்படையில் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்பய்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடன் வசதி அடிப்படையில் உணவுப் பொருட்கள் இறக்குமதி
இந்தியா அரசாங்கத்தின் கடன் வசதி அடிப்படையில் இலங்கைக்கு சீனி, கோதுமை மா, மிளகாய் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
இந்தப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு செலவிடப்படும் தொகையை விடவும் மிக அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

| இலங்கையில் உணவு வீண்விரயத்தினை குறைக்குமாறு கோரிக்கை |
பொருட்கள் விற்கப்படும் விலை
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெள்ளைச் சீனி ஒரு கிலோவிற்கு 159 ரூபா செலவிடப்படுவதுடன் 5 ரூபா வரி செலுத்தப்படுகின்றது.
இதன்படி ஒரு கிலோ கிராம் சீனியின் விலை 164 என்ற போதிலும் இலங்கையில் 300 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
அரசாங்கத்தின் தடை! அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை (Video) |
ஒரு கிலோ கிராம் சம்பா அரிசியின் விலை 180 ரூபா என்ற போதிலும் 210 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
ஒரு கிலோ கிராம் வெள்ளை அரிசி 158 ரூபா என்ற போதிலும் 190 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 165 ரூபா என்ற போதிலும் 250 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
ஒரு கிலோ கிராம் காய்ந்த மிளகாய் 1049 ரூபா என்ற போதிலும் 1750 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
ஒரு கிலோ கிராம் எடையுடைய கோழி இறைச்சி பாகங்கள் 500 ரூபா என்ற போதிலும் 750 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது என அரசாங்கத்தின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் தொடரும் மர்மம் - தனியார் வைத்தியசாலையின் செவிலியர் வழங்கிய வாக்குமூலம்
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam