இலங்கையில் உணவு வீண்விரயத்தினை குறைக்குமாறு கோரிக்கை
உணவுகளை வீணடிப்பதை முடியுமான அளவு குறைக்குமாறு பேராதனை பல்கலைகழகத்தின் விவசாய பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மாரம்பே வலியுறுத்தியுள்ளார்.
எதிர்காலத்தில் ஏற்படவுள்ள உணவு தட்டுப்பாடுக்கு முகங்கொடுப்பதற்கான ஒரு நடவடிக்கையாக இது அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

உணவு தட்டுப்பாடு
உணவு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய நிலை தற்போது உருவாகியுள்ளமை தெளிவாக உள்ளது. அதற்காக அச்சமடைந்து பதற்றமடைவதற்காக இந்த தகவல் வெளியிடப்படவில்லை. தற்போது முதல் அதற்கு முகங்கொடுப்பதற்கு தயாராக வேண்டும் என்பதற்காக இவ்வாறு அறிவுறுத்தப்படுகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உணவு பொருட்களை வீணடிப்பதை குறைத்து தேவையான அளவு உணவை மாத்திரம் தயார் செய்ய வேண்டும். அதனூடாக உணவு வீணடைவதை தவிர்க்க முடியும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam