இலங்கை பிரஜையின் தீவிரவாத தாக்குதல் வழக்கு: தலைமறைவான சந்தேகநபரை சுற்றிவளைத்த என்ஐஏ அமைப்பு
இலங்கை மற்றும் பாகிஸ்தான் பிரஜைகள் சம்பந்தப்பட்ட உளவு வழக்கில் 2023ஆம் ஆண்டு பிணை வழங்கப்பட்ட நிலையில், தலைமறைவான ஒருவரை, இந்திய தேசிய புலனாய்வு(NIA) அமைப்பு கைது செய்துள்ளது.
குறித்த கைதானது இன்று(15) இடம்பெற்றுள்ளது.
இந்த ஆண்டு மே 7ஆம் திகதி அவரை குற்றவாளியாக இந்நிய நீதிமன்றம் அறிவித்திருந்தது.
முன்னதாக டிரொரஃபி நூருதீன் என்ற இவரை கைது செய்ய உதவுவோருக்கு 5 இலட்சம் பணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
வீட்டில் சோதனை
இந்தநிலையில், கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள ராஜீவ் நகர் பகுதியில் இருந்து நூர்தீன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர், கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் தங்கியிருந்த வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.
இதன்போது கையடக்கத் தொலைபேசிகள் உட்பட்ட இலத்திரனியல் உபகரணங்கள் மீட்கப்பட்டதாக என்ஐஏ என்ற இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு அறிவித்துள்ளது.
இலங்கையின் கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரகத்தில் பணிபுரிந்த இலங்கை நாட்டவரான முகமது சாகிர் ஹ_சைன் மற்றும் பாகிஸ்தானிய நாட்டவர் அமீர் சுபைர் சித்திக் ஆகியோருடன் இணைந்து சந்தேகநபர், பயங்கரவாத சதி செய்தார் என்பதே நூர்தீன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டாகும்.
தூதரக வெடிகுண்டு தாக்குதல்
இவரை பயன்படுத்தி 2014ஆம் ஆண்டு சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் பெங்களூரில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன் குற்றம் சாட்டப்பட்ட பாகிஸ்தான் நாட்டவரின் வழிகாட்டலில் போலியான இந்திய ரூபாய்கள் மூலம் தேச விரோத உளவு நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்வதில் நூருதீன் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
