சிறைச்சாலை அதிகாரிகளின் பிடியிலிருந்து தப்பியோடிய சந்தேக நபர்கள் மீண்டும் கைது
மாத்தறையில் சிறைச்சாலை அதிகாரிகளின் பிடியிலிருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர்கள் இருவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொடவில, மஹவத்த பகுதியில் உள்ள ஒரு தென்னந்தோட்டத்தில் சந்தேக நபர்கள் மறைந்திருந்த நிலையில் குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் தெரிவிப்பு
இன்று(21.12.2025) அதிகாலை, ஹெராயின் வைத்திருந்த குற்றத்திற்காக மாத்தறை, கொடவில நீதிமன்றத்தால் இரண்டு சந்தேக நபர்களும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டனர்.

இதனையடுத்து, நீதிமன்ற வளாகத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டபோது, இரண்டு சந்தேக நபர்களும் சிறைச்சாலை அதிகாரிகளின் பிடியிலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
மீண்டும் கைது செய்யப்பட்ட பின்னர், இரண்டு சந்தேக நபர்களும் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam
Avatar Fire And Ash திரைப்படம் 2 நாளில் செய்துள்ள தாறுமாறு வசூல்.... தெறிக்கும் பாக்ஸ் ஆபிஸ் Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri