கனடாவில் அதிகரிக்கும் வெப்பம்: மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி
கனடாவின் ரொறன்ரோ மற்றும் ஹாமில்டன் ஆகிய பகுதிகளில் வெப்பநிலை அதிகளவில் காணப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனால் மக்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஒட்டாவா மற்றும் ஒன்றாரியோ உள்ளிட்ட இடங்களிலும் வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கூடுதல் வெப்பநிலை
எதிர்வரும் ஒரு வார காலத்திற்கு கூடுதல் வெப்பநிலையை எதிர்பார்க்க முடியும் என கனடா சுற்றாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இத்தகைய வெப்பநிலையானது 20 முதல் 35 பாகை செல்சியஸ் வரையில் உயர்வடையும் சாத்தியங்கள் காணப்படும் எனவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
?️? Heat Warnings have been issued for portions of southern Ontario.
— ECCC Weather Ontario (@ECCCWeatherON) July 3, 2023
? Find current alerts through the link!
? https://t.co/BZvNNCwr8R#ONwx pic.twitter.com/xXOqNyQcuu