கிளிநொச்சியில் நடாத்தப்பட்ட சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்வு
உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்திற்காக 'ஆரோக்கியமான சூழல் ஒன்றை உருவாக்கும் பொருட்டு விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று கிளிநொச்சியில் நடாத்தப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது, இன்று (04.06.2024) பளை பொதுச்சந்தையில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, பொலித்தீனுக்கு மாற்றாக கடதாசிப்பைகள், துணிப்பைகள் பனையோலைப்பைகள் என்பன பயன்படுத்துவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வூட்டப்பட்டது.
ஓலைப்பைகள் வழங்கி வைப்பு
மேலும், பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் பைகளைப் பாவிப்பதற்குப் பதிலாக பனை ஓலையால் செய்யப்பட்ட பைகளைப் பாவிப்பதற்கு பொதுமக்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஓலைப்பைகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர், சிரேஸ்ட பொதுச் சுகாதார
பரிசோதகர், பனை அபிவிருத்திச் சபை போதனாசிரியர், பச்சிலைப்பள்ளி பிரதேச சபை
உத்தியோகத்தர்கள், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும்
பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |