உக்ரைனின் எரிசக்தி உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல்களை ஆரம்பித்துள்ள ரஸ்யா
உக்ரைனின் எரிசக்தி உட்கட்டமைப்பு மீது ரஸ்யா நேற்று இரவு முழுவதும் பரவலான தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது.
இதன் காரணமாக நாடு அவசரகால மின்சார தடைகளை நடைமுறைபடுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எதிரி நாடு தனது பயங்கரவாதத்தைத் தொடர்கிறது. மீண்டும் ஒருமுறை, உக்ரைன் முழுவதும் எரிசக்தித் துறை பாரிய தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது என்று உக்ரைன் எரிசக்தி அமைச்சர் ஜெர்மன் ஹலுஸ்செங்கோ தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஏவுகணைகளின் அச்சுறுத்தல்
சேதத்தின் அளவு இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ள அதே நேரத்தில் மக்களை தங்குமிடங்களில் இருந்து வெளியேற வேண்டாம் என்றும் அவர் கோரியுள்ளார்.
மேலும், நாட்டின் சில பகுதிகளை குறிவைக்கும் போலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகளின் அச்சுறுத்தல் குறித்து உக்ரைனின் விமானப்படை எச்சரித்ததால், தலைநகர் கீவில் உள்ள வீதிகள், இன்று காலை முதலே வெறிச்சோடியிருந்தன.
அதேவேளை, ரஸ்யாவின் இன்றைய தாக்குதல், நேற்று தென்மேற்கு ரஸ்யாவில் உள்ள ஒரு நகரத்தின் மீது உக்ரேனிய தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பதிலடி கொடுப்பதாகவே அமைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |