அமெரிக்கா - சீன உச்ச பதற்றம்: சர்வதேசத்தின் கவனத்தை பெற்றுள்ள ட்ரம்ப்பின் அறிவிப்பு
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் தனது பதவியேற்பு விழாவில் பங்கேற்க சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை அழைத்துள்ளார்.
இதுகுறித்து வாஷிங்டனில் உள்ள சீன தூதரகம் கருத்து தெரிவிக்காததால், ஜின்பிங் இதை ஏற்றுக்கொண்டாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரண்டு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம், தாய்வான் விவகாரம் மற்றும் தென் சீனக் கடல் எல்லை விவகாரம் போன்ற பிரச்சினைகளில் தொடர்ந்து பதட்டங்கள் நிலவி வருகின்றன.
ட்ரம்ப் அழைப்பு
இந்நிலையில் ஜி ஜின்பிங்கை ட்ரம்ப் அழைத்துள்ளமையானது உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.
அமெரிக்காவில் சமீபத்தில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் (US Presidential Election 2024) குடியரசுக் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) வெற்றி பெற்றார்.
இந்நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி 20ஆம் திகதி வாஷிங்டனில் ட்ரம்ப், பதவியேற்க உள்ளார்.
அவரது ஆட்சியில் அரசாங்கத்தின் நிர்வாக பொறுப்பை கவனிக்க உள்ளவர்கள் குறித்த அறிவிப்பை அவர் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
மேலும், துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜே.டி.வான்ஸுடன் இணைந்து இந்த விழாவிற்கு தயாராகி வருகிறார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |