யாழ் சந்நிதியான் ஆச்சிரமத்தால் அறநெறி பாடசாலை கட்டிடம் திறந்து வைப்பு
யாழ்ப்பாணம் வடமராட்சி சந்நிதியான் தொண்டமனாறு ஆச்சிரமத்தால் ரூபா 13 இலட்சம் செலவில் அறநெறி பாடசாலை ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலையானது நேற்று (02.06.2024) சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டு வவுனியா வெங்கல சட்டிக்குளம் பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட கணேசபுரம் கிராமத்தின் சித்தி விநாயகர் அறநெறி பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
திரை நீக்கம்
சித்திவிநாயகர் அறநெறி பள்ளி தலைவர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு விழா மண்டபம் வரை அழைத்து வரப்பட்டனர்.
தொடர்ந்து சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் மோகனதாஸ் சுவாமிகள் சித்தி விநாயகர் அறநெறி பள்ளிக் கட்டிட கல்வெட்டினை திரை நீக்கம் செய்து திறந்து வைத்தார்.
இந்நகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் மோகனதாஸ் சுவாமிகள், சமூக செயற்பாட்டாளர் தயாபரன், வெங்கல செட்டிக்குளம் இந்து கலாசார உத்தியோகத்தர் சி.கஜேந்திரகுமார் மற்றும் வெங்கல செட்டிக்குளம் பிரதேச செயலகத்தை சேர்ந்த ம.சுஜேந்திரன், கணேசபுரம் கிராம அமைப்புக்களின் நிர்வாகிகள், அறநெறி பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்