யாழில் இளைய தலைமுறை ஆற்றலாளர் விருதுகள் வழங்கி வைப்பு
கலாநிதி செஞ்சொற் சொல் செல்வர் ஆறு திருமுருகனின் பிறந்த நாளை முன்னிட்டு "இளைய தலைமுறை ஆற்றலாளர் விருது 2024 " விருதுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு நேற்று (02) தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் அன்னை பூரணி மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
பலர் பங்கேற்பு
இதில் இதய சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் ஞானச்சந்திரமூர்த்தி காந்திஜி மற்றும் அண்மையில் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த சாதனையாளர் 13 வயது மாணவன் கரிகரன் தனவந்த் ஆகியோர் விருந்தினர்களிடம் இருந்து விருதுகளை பெற்றுக் கொண்டனர்
இந்நிகழ்வில் நல்லூர் ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமாகிய வசந்தி அரசரட்ணம், யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட பீடாதிபதி வைத்தியர் R.சுரேந்திரகுமார், தெல்லிப்பழை பிரதேச செயலாளர் மற்றும் அறிஞர்கள், புத்திஜீவிகள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்