பிரித்தானியாவால் தடுத்து வைக்கப்பட்ட இலங்கை தமிழர்கள்: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
பிரிட்டிஸ் இந்தியப் பெருங்கடல் பிரதேசத்தில் உள்ள தொலைதூர இராணுவத்தளத்தில், பிரித்தானிய அரசாங்கம், இலங்கை குடியேறிகளை சுமார் இரண்டு வருடங்களாக சட்டவிரோதமாக, தடுத்து வைத்திருந்ததாக அந்த நாட்டின் உயர்நீதிமன்றம் குற்றம் சுமத்தியுள்ளது.
கடலில் மீட்கப்பட்ட பின்னர், அறுபத்து நான்கு இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள், பிரிட்டிஸ்-அமெரிக்க இராணுவத் தளமான டியாகோ கார்சியாவில் உள்ள சிறைச்சாலை போன்ற முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டனர். இது சாகோஸ் தீவுகளின் ஒரு பகுதியாகும்.
1965 இல் இங்கிலாந்தில் இந்த தீவுக்கு டீஐழுவு என மறுபெயரிடப்பட்டது. தமிழர்கள் வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினராக இருக்கும் இலங்கையில் துன்புறுத்தலில் இருந்து தப்பிச் செல்வதாக கூறிய தமிழர்கள், டியாகோ கார்சியாவை அடைந்ததும் சர்வதேச பாதுகாப்பை நாடினர்.
வெளியுறவுச் செயலாளர்கள்
எனினும் அடுத்தடுத்த பிரிட்டிஸ் வெளியுறவுச் செயலாளர்கள் அவர்களை பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கத் தயங்கினர், ஏனெனில் இந்த செயற்பாடு, குறித்த தீவு வழியாக ஒரு புதிய ஒழுங்கற்ற குடியேற்றப் பாதையைத் திறக்கும் என்று அவர்கள் அஞ்சினர்.
எனினும், இந்த மாத ஆரம்பத்தில், பெரும்பாலான குடியேறிகள் இறுதியாக பிரித்தானியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். மற்றும் லண்டனில் இருந்து புகலிடம் கோர வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்தநிலையில் அவர்கள் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றின்போது, அந்நாட்டு உயர்நீதிமன்ற நீதியரசரான மார்கரெட் ஓபி,பிரித்தானிய அரசாங்கத்தின் செயலை கண்டித்துள்ளார்.
புலம்பெயர்ந்தோர் இராணுவ தளத்தில் அசாதாரணமாக நீண்ட காலமாக, சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
பிரித்தானிய அரசாங்கம்
எனவே பிரித்தானிய அரசாங்கம் இப்போது பெரும் சேதங்களை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
குறித்த இலங்கையர்கள் ஒரு கால்பந்து மைதானத்தின் அளவிலான முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர், மேலும் அவர்கள் தனியுரிமை இல்லாமை மற்றும் எலிகளின் தொல்லை ஆகியவை மத்தியில் சிறை போன்ற" நிலைமைகளை எதிர்கொண்டதாக நீதியரசர் தெரிவித்துள்ளார்.
மனநலம் மோசமான நிலையில், குறித்த புலம்பெயர்ந்தோர் தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்ள முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன என்றும் நீதியரசர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் டியாகோ கார்சியாவின் ஆணையாளர், குறித்த இலங்கையர்கள் தடுத்து வைக்கப்படவில்லை என்று கூறியதை ஏற்றுக்கொள்ளாத நீதியரசர், அவர்கள், சர்வதேச பாதுகாப்பை நாடியதால் இலங்கைக்குத் திரும்ப முடியாது என்றபோதும், இது உண்மையான தேர்வு அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri
