நீண்ட கால நட்புறவை வலுப்படுத்துவது தொடர்பில் இலங்கை இந்திய ஜனாதிபதிகள் கலந்துரையாடல்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும்(Anura Kumara Dissanayaka) இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கும்(Draupadi Murmu) இடையிலான சந்திப்பு நேற்று மாலை புதுடில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பின்போது, இந்திய - இலங்கை இடையிலான நீண்டகால நட்புறவை வலுப்படுத்துவது மற்றும் பிராந்திய பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்து கருத்துப் பரிமாறப்பட்டது.
இராப்போசன விருந்து
சிநேகபூர்வ சந்திப்பின் பின்னர் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு இராப்போசன விருந்து வழங்கினார்.

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ ஆகியோரும் இந்தச் சந்திப்பில் இணைந்து கொண்டனர்.
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam