ஒரு வருடத்துக்குள் அநுர அரசு ஆட்சியை இழப்பது உறுதி : சஜித் அறிவிப்பு
அநுர அரசு ஒரு வருடத்துக்குள் ஆட்சியை இழப்பது உறுதி என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இனியாவது விழிப்படைய வேண்டும்
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
போலி வாக்குறுதிகளை வழங்கி போலிக் கல்வித் தகைமைகளுடன் ஆட்சி அதிகாரத்துக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசு, ஒரு மாதத்துக்குள் சபாநாயகரை இழந்துள்ளது.

அதியுயர் சபையில் போலிக் கலாநிதிப் பட்டத்துடன் சபாநாயகர் கதிரையை அலங்கரித்தவர், ஒரு மாதத்துக்குள் உண்மை நிலைமை வெளியில் தெரியவர பதவியில் இருந்து விலகியுள்ளார்.
தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தவர்கள் இனியாவது விழிப்படைய வேண்டும். ஒரு மாதத்துக்குள் சபாநாயகரை இழந்த அரசு, ஒரு வருடத்துக்குள் ஆட்சியை இழப்பது உறுதி. ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சி விரைவில் மலரும் என தெரிவித்துள்ளார்.
எல்லைமீறிய கவர்ச்சியில் பிக் பாஸ் சாக்ஷி அகர்வால்.. நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் - அழகே அழகு சீரியல்கள் மகா சங்கமம்.. ஒளிபரப்பு நேரம், தேதி எப்போது தெரியுமா? Cineulagam