இலங்கை அணிக்கு எதிராக வலுவான நிலையில் இங்கிலாந்து
சுற்றுலா இலங்கை (Sri Lanka) அணிக்கும் இங்கிலாந்து (England) அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமுடிவின்போது இங்கிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது
இதன்படி இங்கிலாந்து அணி 256 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளதுடன் 9 விக்கெட்டுக்களையும் தக்கவைத்துள்ளது.
முன்னதாக தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 427 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
விக்கெட் இழப்பு
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, தமது முதல் இன்னிங்ஸில் 196 ஓட்டங்களுக்குள் தமது அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

இதனையடுத்து இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்டமுடிவின்போது, ஒரு விக்கெட் இழப்புக்கு 25 ஓட்டங்களை பெற்றிருந்தது.
முன்னதாக இங்கிலாந்து அணி முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கையை தோற்கடித்தமை குறிப்பிடத்தக்கது.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
இரவில் உக்ரைன் மீது படையெடுத்த 200க்கும் மேற்பட்ட ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்த போராடிய வீரர்கள் News Lankasri
அமெரிக்காவால் வெனிசுலாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: கச்சா எண்ணெய் ஏற்றுமதி 75% வீழ்ச்சி News Lankasri
சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி பிரியா நடிக்க வருவதற்கு முன் எப்படி இருந்தார் பாருங்க.. புகைப்படம் இதோ Cineulagam