லோர்ட்ஸ் மைதானத்தில் மஹேல ஜயவர்தனவிற்கு கிடைத்த பெருமை
உலகின் சிறந்த கிரிக்கட் மைதானங்களில் ஒன்றாக போற்றப்படும் இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன கௌரவிக்கப்பட்டுள்ளார்.
மஹேல ஜயவர்தன, இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியை மணி அடித்து நேற்றைய தினம் (29.08.2024) ஆரம்பித்து வைத்துள்ளார்.
லோர்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் போட்டி ஆரம்பிப்பதற்கு 5 நிமிடங்கள் முன் இவ்வாறு மணி அடிக்கப்பட்டு ஆரம்பிக்கப்படும்.
பெருமைக்குரிய இலங்கையர்கள்
உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் லோர்ட்ஸில் இவ்வாறு மணி அடித்துள்ளனர்.
இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்களான அர்ஜுன ரணதுங்க, குமார் சங்கக்கார, சனத் ஜயசூரிய, சமிந்த வாஸ், சிதத் வெத்தமுனி, மார்வன் அத்தபத்து ஆகியோரும் நற்குண முன்னேற்ற அமைப்பின் ஸ்தாபகர் குஷில் குணசேகரவும் லோர்ட்ஸ் மைதானத்தில் மணி அடித்து போட்டியை ஆரம்பித்த பெருமைக்குரிய இலங்கையர்களாவர்.
போட்டி ஆரம்பிக்கப்பட உள்ளதை அறிவிக்கும் வகையில் இந்த மணி அடிக்கப்படுகின்றது.
சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத் தலைவராக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் ஜெய் ஷா தெரிவு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |