வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் 100 புதிய ஊழியர்களுக்கு நியமனம்
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் நிலவும் வெற்றிடங்களை நிரப்பவும், புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கான சேவைகளை வலுப்படுத்தவும் 100 புதிய ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு, வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் நேற்றைய தினம் (07.09.2026) நடைபெற்றது.
வழங்கப்பட்டுள்ள நியமனம்
மேலாண்மை உதவியாளர்கள், தகவல் தொழிநுட்ப அதிகாரிகள், ஓட்டுநர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்கள் போன்ற பதவிகளுக்கு நியமனம் அளிக்கப்பட்டது.
தேவையான கல்வி மற்றும் தொழில்முறைத் தகுதிகளின் அடிப்படையில் வெளிப்படையான ஆட்சேர்ப்பு செயல்முறை மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

பணியமர்த்தல்
புதிய ஊழியர்கள் அவர்களின் தேவைக்கேற்ப பணியகத்தின் தலைமை அலுவலகம், மாகாண மற்றும் மாவட்ட அலுவலகங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.
இதேவேளை புலம்பெயர் தொழிலாளர்கள், வருங்கால வெளிநாட்டு வேலை தேடுபவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு மிகவும் திறமையான, தடையற்ற சேவையை வழங்குவதையே இந்த நியமனங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
வீராணம் திட்டத்திற்கு லஞ்சம் கேட்ட கலைஞரின் மருமகன் - சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் விஜய் News Lankasri
படு பிரம்மாண்டமான பிக்பாஸ் 10வது சீசனை தொகுத்து வழங்க விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம்... எத்தனை கோடி? Cineulagam