தாய்லாந்தில் 10000 இலங்கைத் தொழிலாளர்களை பணியமர்த்த திட்டம்
தொழிலாளர் வெற்றிடங்களை சமாளிக்கும் நோக்கில், இலங்கையிலிருந்து ஆரம்பகட்டமாக 10,000 தொழிலாளர்களை பணியமர்த்த தாய்லாந்து அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
தாய்லாந்து தொழிலாளர் அமைச்சர் ஜுலாபுன் அமோர்ன்விவாட், இலங்கையிலிருந்து தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு வெளிநாட்டுத் தொழிலாளர் முகாமைத்துவக் கொள்கைக் குழு, நேற்று நவம்பர் 6ஆம் திகதி அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஆட்சேர்ப்புக்கான விபரங்கள்
இலங்கை மற்றும் தாய்லாந்து இடையே கைச்சாத்திடப்பட்ட தொழிலாளர் ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

இதன் கீழ் தொழிலாளர் ஆட்சேர்ப்பு, வேலை ஒப்பந்தங்கள், மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் தொழிலாளர்களை மீண்டும் தாயகம் அனுப்புதல் உள்ளிட்ட நடைமுறைகள் ஒழுங்குபடுத்தப்படவுள்ளன.
மேலும், சட்டவிரோத தொழிலாளர் ஆட்சேர்ப்பு மற்றும் மனிதக் கடத்தலைத் தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
ஆரம்பகட்ட இலக்கு 10,000 தொழிலாளர்கள் என்பதுடன், ஆட்சேர்ப்புக்கான துறைவாரியான விபரங்கள் மற்றும் விண்ணப்ப நடைமுறைகள் குறித்த மேலதிக அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன.