இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தடை நீடிப்பு!
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள், ஐக்கிய அரபு அமீரகத்துக்குள் நுழைவதற்கான தடை நீடிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 28 ஆம் திகதிவரை இவ்வாறு தடை நீடிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளால் தமக்கு விடுக்கப்பட்டுள்ளதாக டுபாயை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
கடந்த 14 நாட்களுக்குள் மேற்குறிப்பிட்ட நாடுகளுக்குச் சென்ற பயணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தின் எந்த இடத்துக்கும் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எமிரேட்ஸ், அமீரக கோல்டன் வீஸா வைத்திருப்போருக்கும் இராஜ தந்திரிகளுக்கும் அமீரகத்துக்குள் நழையத் தடையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பலமான ஒரு அரசின் நேரடி ஆதரவின்றி, தேசிய இன விடுதலை சாத்தியமற்றது! 23 மணி நேரம் முன்
மகளிர் உலகக்கோப்பை - இந்தியா வெற்றிபெற்றால் மாபெரும் பரிசுதொகையை அறிவிக்க உள்ள பிசிசிஐ News Lankasri