அவசர தொலைபேசி இலக்கம்: கடும் சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் பொலிஸார்
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் ஸ்தாபிக்கப்பட்ட 118 அவசர தொலைபேசி இலக்கத்திற்கு வழங்கப்படும் தகவல்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அதன்படி, தேசிய பாதுகாப்பிற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய பயங்கரவாத மற்றும் தீவிரவாத செயற்பாடுகளையும் இந்த இலக்கத்திற்கு வழங்க முடியும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அறிவித்துள்ளார்.
இவ்வாறு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் தனிக்குழுவொன்றினால் கண்காணிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
சட்ட நடவடிக்கை
மேலும், 118 அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பு மேற்கொண்டு பொய்யான தகவல்களை வழங்குபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கிளீன் தையிட்டி..! 2 நாட்கள் முன்

அட்டகாசமாக நடந்த சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லாவின் வளைகாப்பு... நேரில் சென்ற நடிகர்கள் Cineulagam

ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்டுள்ள நடிகை சாக்ஷி அகர்வால்..எங்கே சென்றுள்ளார் பாருங்க, போட்டோஸ் Cineulagam

உக்ரைனுக்கு பிரித்தானிய படைகளை அனுப்ப உள்நாட்டிலேயே எதிர்ப்பு: எச்சரிக்கும் ராணுவ தளபதிகள் News Lankasri

சுந்தரி சீரியல் புகழ் நடிகை கேப்ரியல்லா செல்லஸ் வளைகாப்பு புகைப்படங்கள்.. இத்தனை பிரபலங்கள் வந்தார்களா.. Cineulagam
