நோய் தொற்று அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலையை நாடுங்கள்! விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு
நாட்டில் தீவிரமடையும் இன்புளுவன்சா நோய் தொற்று அறிகுறிகளுடன் கூடிய வைரஸ் நோய் இந்த நாட்களில் வேகமாக பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
எனவே நோய் தொற்றின் அறிகுறியாக சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவக்கூடியது என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

உடனடியாக வைத்தியசாலையை நாடுங்கள்
இந்த இன்புளுவன்சா நோய் தொற்று கோவிட் -19 நோயுடன் ஒப்பிடுகையில், நோயினால் ஏற்படும் சிக்கல்கள் குறைவாகவே காணப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்த நோய் தொற்று அறிகுறிகள் தென்பட்டால் சரியான சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, நோய் நிலைமை மோசமடைந்தால் மாத்திரமே வைத்திய ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை உருவாக்கும் பாகிஸ்தான் - உளவுத்துறை எச்சரிக்கை News Lankasri
முக்கிய தலைவர்களை இழந்தும் அசராமல் போரிடும் ஈரான் - பின்னணியில் மொசைக் பாதுகாப்பு கோட்பாடு News Lankasri