உடனடியாக வைத்தியசாலையை நாடுங்கள்! இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு
இலங்கை மக்களிடையே இந்த நாட்களில் ஒருவருக்கு காய்ச்சல், உடல்வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனைகளை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேசிய தொற்று நோய்களுக்கான மையத்தின் பிசியோதெரபிஸ்ட் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம இதனை தெரிவித்துள்ளார்.
வலி நிவாரணி மருந்துகளை உட்கொள்ள வேண்டாம்
இதற்கமைய, ஒருவருக்கு காய்ச்சல் அல்லது உடல்வலி ஏற்படும் பட்சத்தில் பெரசிட்டமோல் தவிர வேறு எந்த வலி நிவாரணி மருந்துகளையும் உட்கொள்ள வேண்டாம் என்றும், விரைவாக இரத்தப் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் வைத்தியர் அறிவுறுத்தியுள்ளார்.
நாட்டில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதோடு கடந்த 08 நாட்களில் மாத்திரம் 2,500 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, யாழ்ப்பாணம், இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 16 மணி நேரம் முன்

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
