இலங்கையில் நாளை முதல் முகக் கவசம் கட்டாயம் இல்லை! சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தல்
இலங்கையில் இனிமேல் முகக் கவசம் அணிவது கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
உட்புற மற்றும் வெளிப்புற இடங்களில் முகக் கவசம் அணிவது இனி கட்டாயமில்லை என இலங்கை சுகாதார அமைச்சு இன்று அறிவித்துள்ளது.
சுகாதார அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
எப்படியிருப்பினும் சுவாச பிரச்சினைகள் உள்ளவர்கள் முகக் கவசம் அணிவதற்கு பரிந்துரைப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, நாளை முதல் அமுலாகும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், முகக்கவசம் அணிய விரும்புபவர்கள் எந்த தடையும் இன்றி அதனை அணிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கபட்டுள்ளது.
இதேவேளை, நாளை முதல் பிசீஆர் அல்லது ரெபிட் அன்டிஜன் சோதனை மேற்கொள்வது அவசியம் இல்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இலங்கை உட்பட உலகளாவிய ரீதியில் பரவிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முகக் கவசம் அணியும் நடைமுறை அமுல்படுத்தப்பட்டது.
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
ரஜினி படத்தில் இருந்து வெளியேறிய சுந்தர் சி.. திடீரென குஷ்பூ - கமல்ஹாசன் நேரில் சந்திப்பு! Cineulagam