கோட்டாபய மற்றும் ரணிலுக்கிடையில் அவசர சந்திப்பு! தென்னிலங்கை அரசியலில் ஏற்படப் போகும் மாற்றம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் அவசர சந்திப்பொன்று இடம்பெற்று வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி இன்றிரவு நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தவுள்ள நிலையில், தற்போது ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளமையானது பேசுபொருளாக அமைந்துள்ளது.
நாட்டு மக்களுக்கு இன்றிரவு ஜனாதிபதி வழங்கவுள்ள விசேட உரை |
இதேவேளை குறித்த சந்திப்பு தென்னிலங்கை அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியால் நாளுக்கு நாள் அமைதியற்ற சூழல் அதிகரித்து வருகின்றது.
பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகியுள்ள நிலையில், நாட்டில் தொடர்ச்சியாக ஊரடங்குச் சட்டமும், அவசரகாலச் சட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இன்றிரவு ஊரடங்கு கடுமையாக்கப்படுகிறது! பொலிஸார் அறிவிப்பு |
தற்போது தலைநகர் கொழும்பில் ராணுவ கவச வாகனங்கள் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே முன்னாள் பிரதமர் ரணிலுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான இந்த அவசர சந்திப்பு நடைபெற்று வருகின்றது.
இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று இரவு 9 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

Ethirneechal: விஷ பாம்பாக மாறிய குணசேகரன்.. நடுசாமத்தில் பதறிய நந்தினி- இது எப்படி முடிவுக்கு வரும்? Manithan
