இன்றிரவு ஊரடங்கு கடுமையாக்கப்படுகிறது! பொலிஸார் அறிவிப்பு
இன்று இரவு ஊரடங்குச் சட்டம் கடுமையான நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஊரடங்குக் காலப்பகுதியில் எந்தவொரு வன்முறையிலும் ஈடுபடவேண்டாம் என்று பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வீதிகளில் தேவையற்ற விதத்தில் குழுக்களாக ஒன்றுகூடவேண்டாம் எனவும் பொதுமக்களை பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை உக்கிரமடைந்ததை அடுத்து பொதுமக்கள் வீதிக்கு இறங்கி போராட ஆரம்பித்தனர்.
போராட்டங்கள் தீவிரமடைந்ததை அடுத்து அது பாரிய அரசியல் நெருக்கடிகளையும் தோற்றுவித்தது, இதன் காரணமாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.
எனினும் பதவி விலகுவதற்கு முன்னர் மகிந்த ஆதரவாளர்கள் என்ற பெயரில் குண்டர்கள் களமிறக்கப்பட்டு அமைதியான ஆர்ப்பாட்டங்கள் சீர்குலைக்கப்பட்டு வன்முறை நிலை ஏற்பட்டது.
இதன் காரணமாக நாட்டின் அமைதி சீர்குலைந்ததுடன், நாட்டில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. கடந்த இரண்டு நாட்களாக ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டு வருவதுடன் நாளையதினம் ஊரடங்கு காலை 7 மணிக்கு தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
| தேவைப்படும் போது துப்பாக்கிச் சூடு நடத்த பொலிஸாருக்கு அனுமதி! வெளியானது விசேட அறிவித்தல் (Photo) |
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri