மத்திய கிழக்கில் தீவிரமடையும் பதற்றநிலை.. அவசர அவரசமாக நடந்த கோப்ரா கூட்டம்
மத்திய கிழக்கின் நிலைமை குறித்து அவசர கோப்ரா கூட்டம் ஒன்று பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கூட்டத்தில் அமைச்சர்கள் மத்திய கிழக்கில் பிரித்தானிய பிரஜைகளை ஆதரிப்பதற்கும் பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
G7 உச்சிமாநாடு
மேலும், தொடர்ந்து வரும் இராஜதந்திர முயற்சிகள் குறித்து புதுப்பிக்கப்பட்டதாகவும் பிரித்தானிய செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கனடாவில் நடந்த G7 உச்சிமாநாட்டிலிருந்து திரும்பிய பின்னர், உயர்மட்ட அவசரகால பதிலளிப்பு குழுவைக் கூட்ட ஸ்டார்மரின் முடிவு வந்துள்ளது.
அங்கு அவரும் பிற உலகத் தலைவர்களும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான தங்கள் உறுதிப்பாட்டை வலியுறுத்தியுள்ளனர்.
ஈரான் - இஸ்ரேலுக்கு இடையிலான மோதல் காரணமாக மத்திய கிழக்கில் போர்பதற்றம் அதிகரித்து வருகின்றது.
அத்துடன், அமெரிக்காவும் இந்த மோதலில் இஸ்ரேலுடன் கைகோர்ப்பது குறித்து பரிசீலித்து வருவதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்நிலையிலேயே அதிகரிக்கும் இந்த பதற்றநிலைக்கு மத்தியில் அவசர கோப்ரா கூட்டத்தினை கெய்ர் ஸ்டார்மர் கூட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
