எதிர்க்கட்சி தலைவரின் கைகளை பிடித்து கதறிய மக்கள்! கண்ணீருக்கு மத்தியில் நடந்த இறுதி சடங்கு
எல்ல-வெல்லவாய சாலையில் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த தங்காலை மக்களின் இறுதிச் சடங்கில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொண்டார்.
இந்த விபத்தில் உயிரிழந்த தங்காலை மக்களின் இறுதிச் சடங்கு இன்று(07.09.2025) நடைபெற்றது.
இறுதி சடங்கு
இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர், தங்காலை மாநகர சபையின் செயலாளர் மற்றும் பல நகராட்சி ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உயிரிழந்தனர்.
பாதிக்கப்பட்டவர்கள் கடுருபோகுன, அரன்வல, கட்டமன்னே, பள்ளிக்குடாவ, தெனகம மற்றும் பெலியத்த உள்ளிட்ட தங்காலை மாநகர சபைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களின் வீடுகளுக்குச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கைகைளை பிடித்து இறந்தவர்களின் உறவினர்கள் கதறி அழுதனர்.
இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசபாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
விபத்து
இராவண எல்ல பகுதியில் கடந்த வியாழக்கிழமை(04) பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளான பேருந்தில் இருந்த 34 பேரில்15 பேர் உயிரிழந்திருந்தனர்.
மேலும், 18 பேர் காயமடைந்ததாகவும் ஒரு பயணி காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
தங்காலை நகர சபை ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களை ஏற்றிச் சென்ற குறித்த தனியார் சுற்றுலாப் பேருந்து, நுவரெலியாவிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த போது, ஒரு சொகுசு காரில் மோதி பள்ளத்தில் விழுந்தமை குறிப்பிடத்தக்கது.








