எல்ல மற்றும் இராவணா எல்ல இடையில் ஆபத்தான 10 இடங்கள்! எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை
பதுளை, எல்ல - வெல்லவாய வீதியின் எல்ல மற்றும் இராவணா எல்ல இடையில் ஆபத்தான 10 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகார சபை
பதுளை மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியியலாளர் S.S.ஹேன்னாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,''ஆபத்தான 10 இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள குறித்த பகுதிகள் தொடர்பில் விசேட ஆய்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதேவேளை, பதுளை மாவட்டத்தில் ஏற்படும் விபத்துகளைத் தவிர்ப்பதற்காக 700 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சட்டம்
அதற்கமைய, குறித்த வீதிகளின் இருபுறங்களையும் பாதுகாப்பான முறையில் மீளக் கட்டமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்கீழ் 26 கிலோமீட்டர் தூரம் கொண்ட வீதி மீள்கட்டமைக்கப்படவுள்ளது.'' என அந்த சபையின் நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஆபத்தை விளைவிக்கக்கூடிய வகையில் மேலதிக பாகங்கள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு எதிராக நாளை முதல் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




