நெற்செய்கையை அழிக்கும் யானைகள் : விவசாயிகள் கவலை
இரவு வேளைகளில் நெற்செய்கையை யானைகள் அழித்து வருவதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
கல்மடு குளத்தின் கீழ் பெரும்போக நெற்செய்கையில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் 70 நாட்கள் கடந்த நிலையில் உள்ள நெற் பயிர்களை இரவு வேளைகளில் 5, 6 காட்டு யானைகள் தொடர்ச்சியாக துவசம் செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.
இதன் காரணமாக தொடர்ச்சியாக இப்பகுதியில் நெற் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இரவு பகலாக நித்திரை இன்றி காவல் காக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
இந்நிலையில், நெற்செய்கையில் பெரும் நட்டத்தை எதிர்நோக்குவதாகவும் இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விவசாயிகளின் நிலைகளை நேரடியாக பார்வையிட்டு தமக்கான நிரந்தர தீர்வு ஒன்றினை பெற்று தர வேண்டுமென விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்ககையில்.....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |