முல்லைத்தீவில் அதிகரித்துவரும் யானை மனித மோதல்! மக்கள் உயிருக்கு அச்சுறுத்தல்
முல்லைத்தீவு மாவட்டத்தில் யானை மனித மோதல் தற்போது தீவிரம் பெற்று வருகின்றது.
மக்களின் வாழ் இடங்களுக்குள் புகுந்துகொள்ளும் காட்டுயானைகள் மக்களின் வாழ் இடத்தினை சேதப்படுத்துவதுடன் விவசாய செய்கையினையும் அழித்து உயிருக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் சம்பவம் தொடர்ச்சியாக பதிவாகிவருகின்றது.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட முத்தையன் கட்டு 01ம் கண்டம் சுடலை வீதி பகுதியில் வாழ்ந்துவரும் 8 குடும்பங்களின் வீடுகளில் ஒரு வீடு யானைத்தாக்குதலில் பகுதியளவில் வாழமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
யானை மனித மோதல்
மின்சாரம் இல்லாத நிலையில் கூலித்தொழில் மற்றும் விவசாயம் செய்துவரும் இந்த குடும்பங்களின் நிலையினை இதுவரையும் எந்த அரசியல் வாதிகளும் கண்டுகொள்ளவில்லை தேர்தல் காலங்களில் வாக்குக்காக வருபவர்கள் மக்களின் நிலையினை இதுவரை கவனத்தில் கொள்ளவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றார்கள்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் குறித்த ஒரு வீட்டிற்குள் சென்ற காட்டுயானை முன்பக்க கதவினை உடைத்துவிட்டு பின்னர் சாமி அறையின் பின்பக்கம் சென்று ஜன்ல் பகுதியினை முற்றாக உடைத்து வீட்டுக்கள் வைக்கப்பட்டிருந்த நெல்பைகளில் 6 நெல்பைகளை உண்டு நாசம் செய்துள்ளதுடன் வீட்டில் இருந்த பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் குறித்த குடும்பத்தின் வீடு யானைத்தாக்குதலில் பகுதிஅளவில் சேதமடைந்துள்ளதுடன் வீட்டில் தங்க முடியாத நிலை காணப்படுகின்றது.
இரண்டு பக்கதில் உள்ள லிண்டர்கள் யானை தாக்குதலால் உடைந்து தொங்கிக்காணப்படுகின்றது இதனால் அயல் வீடுஒன்றிலேயே குறித்த குடும்பம் தங்கி வருகின்றார்கள்.
இந்த நிலையில் யானையினால் ஏற்பட்ட இழப்பினை அரசாங்கம் பெற்றுக்கொடுக்கவேண்டும் என்பதுடன் இந்த மக்களுக்கான மின்சார இணைப்பினையும் அரசாங்கம் வழங்கவேண்டும் என்று குறித்த குடும்பங்களை சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
யானை உயிரிழப்பு
இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட பேராறு எனப்படும் ஆற்றுக்குள் கடந்த இரண்டு நாட்களாக உயிருக்கு போராடிவந்த காட்டுயானை ஒன்று நேற்று(05.10.2026) உயிரிழந்துள்ளது.
குறித்த யானை கடந்த இரண்டு நாட்களா போராறு எனப்படும் ஆற்று பகுதியில் காணப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது. யானையின் உயிரிழப்பு தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

குறித்த யானை பாதிப்பிற்கு ஏதும் உள்ளாகியுள்ளதா என்றும் உயிரிழப்பிற்கான காரணம் என்ன என்பது மற்றும் மிருகவைத்திய உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளும் நடவடிக்கையில் ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மேற்கொண்டுள்ளார்கள்.
யானை ஆற்றில் உயிருடன் இருக்கும் போது கிராம மக்கள் பலர் சென்று பார்வையிட்டு உணவளித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கேள்விக்குறியாகியுள்ள மாணவர்களின் ஒழுக்கம்! கந்தளாயில் பாடசாலை மாணவர்களுக்கு பொருத்தமற்ற சிகை அலங்காரம்
100 ஆடுகள் பலியிட்டு கறிக்குழம்பு ...ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா! எங்கு தெரியுமா? Manithan