மீண்டும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தினால் அரசுக்கே ஆபத்து! திஸ்ஸ அத்தநாயக்க எச்சரிக்கை

Tissa Attanayake Ceylon Electricity Board Sri Lanka Electricity Prices
By Rakesh Apr 07, 2026 05:30 AM GMT
Report

தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டமையே மின்சாரக் கட்டண அதிகரிப்புக்குக் காரணமாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். 

மீண்டும் கட்டணங்களை உயர்த்த அரசு முற்பட்டால், அது தற்போதைய ஆட்சியாளர்களின் இருப்புக்கே பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

தரமான நிலக்கரி

இது குறித்து ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில், தரமான நிலக்கரி கொண்டு வரப்பட்டிருந்தால் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவையே ஏற்பட்டிருக்காது.

ஈரான் முழுவதையும் நாளை கைப்பற்றுவோம்! ஈரானின் இறுதி இரவு... ட்ரம்ப் அதிரடி

ஈரான் முழுவதையும் நாளை கைப்பற்றுவோம்! ஈரானின் இறுதி இரவு... ட்ரம்ப் அதிரடி

தரம் குறைந்த நிலக்கரியை வழங்கிய நிறுவனங்களுக்கு எதிராகத் தண்டப்பணம் விதிக்கக் கூடாது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறுவது வேடிக்கையானது.

அவ்வாறு தண்டப்பணம் விதித்தால் அந்நிறுவனங்கள் விநியோகத்தை நிறுத்திவிடும் என அவர் கூறுவது, திருட்டுச் செயலுக்குப் பகிரங்கமாக ஆதரவளிப்பதாகும். தவறு செய்த நிறுவனங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க அஞ்சும் அரசின் செயற்பாடு பல சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது.

மீண்டும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தினால் அரசுக்கே ஆபத்து! திஸ்ஸ அத்தநாயக்க எச்சரிக்கை | Electricity Tariffs Increased Again Warns

இரகசிய உடன்பாடுகள்

குறித்த நிறுவனங்களுடன் அரசுக்கு ஏதேனும் இரகசிய உடன்பாடுகள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. இவ்வாறான முறையற்ற நிர்வாகத்தினாலேயே இன்று மக்கள் மின்சாரக் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே வாழ்க்கைச் செலவு உயர்வால் மக்கள் கடும் நெருக்கடியில் உள்ளனர். இந்நிலையில், மீண்டும் ஒரு மின்சாரக் கட்டண அதிகரிப்பை மக்கள் மீது சுமத்த அரசு திட்டமிட்டால், அது அரசுக்கு எதிரான மக்களின் பாரிய எழுச்சிக்கு வழிவகுக்கும். இது அரசின் அரசியல் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிவிடும் என்றார்.

ஈரானை மிரள வைத்த அதிரடி நடவடிக்கை! மிகப்பெரிய பெட்ரோலிய இரசாயன ஆலையை அழித்த இஸ்ரேல்

ஈரானை மிரள வைத்த அதிரடி நடவடிக்கை! மிகப்பெரிய பெட்ரோலிய இரசாயன ஆலையை அழித்த இஸ்ரேல்

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US