ருவன்வெலிசேயா தாக்குதல் சம்பவம் - விசாரணை கோரி நீதிமன்றில் மனு தாக்கல்
அனுராதபுர புனித நில அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிராக தேரர்கள் குழு ஒன்று நடத்திய சத்தியாகிரக இயக்கத்தின் போது, ருவன்வெலி சேயாவில் கூடியிருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் முறைப்படி விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு, உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியான சாந்த ஜெயதிலகா தாக்கல் செய்துள்ளதுடன், அனுராதபுர தலைமையக பொலிஸ் ஆய்வாளர் உள்ளிட்ட ஒரு குழுவினர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
மனு தாக்கல்
தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் இதுவரை எந்த முறைப்படி விசாரணையும் நடத்தவில்லை என்று மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த அசாதாரணமான மற்றும் சட்டவிரோதமான செயலின் மூலம், தன்னை உள்ளடக்கிய குடிமக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன என்று நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பிரதிவாதிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் மனு மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.