கிளிநொச்சி இளம் பெண் விவகாரம் - மருத்துவ பரிசோதனையில் வெளியான தகவல்
புதிய இணைப்பு
கிளிநொச்சி - சாந்தபுரம் பகுதியில் 26 வயதுடைய இளம் யுவதி ஒருவரை தவறான நடத்தைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் முறையே 17, 18 மற்றும் 20 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூவரில் 17 வயதுடைய சிறுவன் ஒருவனும் உள்ளடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் இன்று(10.11.2026) கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில் சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்தச் சோதனைகளின் போது, சந்தேகநபர்கள் மூவரும் கஞ்சா மற்றும் ஐஸ் உள்ளிட்ட ஆபத்தான போதைப்பொருள்களைப் பயன்படுத்தியிருந்தமை மருத்துவ பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலதிக தகவல் - ராகேஷ்
முதலாம் இணைப்பு
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாந்தபுரம் கிராமத்தில் வீட்டில் பெற்றோருடன் தங்கியிருந்த இளம் பெண்ணொருவரை கத்திமுணையில் அச்சுறுத்தி தவறான நடத்தைக்கு உட்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் நான்கு இளைஞர்கள் கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் நேற்று முன்தினம் இரவு(08.11.2026) தனது பெற்றோருடன் தங்கியிருந்த 26 வயதுடைய இளம் குடும்பப் பெண் ஒருவரை நான்கிற்கும் மேற்பட்டோர் கத்தி முனையில் அச்சுறுத்தி கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது பெற்றோர் பொலிஸாருக்கு வாக்கு மூலம் வழங்கியுள்ளனர்.
பெண் வைத்தியசாலையில் அனுமதி
இதன் அடிப்படையில் நான்கு சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட பெண் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மற்றும் கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.