நுவரெலியாவில் வெட்டுக்காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு - காதலன் தப்பியோட்டம்
நுவரெலியா - மாஸ்தொட்ட பகுதியில் சுற்றுலா விடுதியொன்றில் (கபானா) பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று(10.11.2026) இடம்பெற்றுள்ளது.
அம்பாறை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய பியூமி தில்ஷானி என்ற இளம் பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த பெண், நுவரெலியா தேரிப்பஹ பகுதியில் வசிக்கும் தனது 27 வயதுடைய காதலனுடன் கடந்த 07ஆம் திகதி குறித்த சுற்றுலா விடுதிக்கு வருகை தந்து, கட்டணம் செலுத்தி அறையை முன்பதிவு செய்துள்ளார்.
28 வயது காதலனால் நேர்ந்த கதி
இந்த நிலையில், நேற்று(10) காலை குறித்த பெண் விடுதிக்குள் காயங்களுடன் விழுந்து கிடப்பதைக் கண்ட விடுதியின் உரிமையாளர், இது தொடர்பில் நுவரெலியா பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் பெண்ணின் சடலத்தைக் கண்டெடுத்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் காதலன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரைக் கைது செய்வதற்கான விசாரணைகளைப் பொலிஸார் ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் தொடர்பில் நுவரெலியா நீதவானின் இடப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட பின்னர், பிரேதப் பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.


ஈரானியர்களுக்கு வழங்கப்பட்ட கதிர்வீச்சு எதிர்ப்பு மாத்திரைகள்... அணு ஆயுதப் போர் குறித்த அச்சம் அதிகரிப்பு News Lankasri
அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் Rolls Royce கார் வரும்... மகாநதி சீரியல் நடிகை பரபரப்பு புகார்... Cineulagam