மின் கட்டண திருத்தத்திற்கான திகதி அறிவிப்பு
மின்சார கட்டண திருத்தம் தொடர்பான ஆணைக்குழுவின் இறுதி முடிவு இம்மாதம் 14ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின்சாரக் கட்டணத்தை 6.8 சதவீதத்தால் அதிகரிக்க இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளதாக அதன் பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத் தெரிவித்தார்.
மின் கட்டண அதிகரிப்பு
மறுசீரமைப்பு திட்டங்களை அதிகாரிகள் முறையாக செயல்படுத்தத் தவறியதால், மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் நந்தன உதயகுமார தெரிவித்தார்.
இதற்கிடையில், மின்சார சபையினை பிரிப்பதன் மூலம் தற்போது 1.5 மில்லியன் ரூபாயாக இருக்கும் பணிப்பாளர்கள் குழுவின் கட்டணம் கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்று மின்சார பயனர் சங்கத்தின் தலைவர் எம்.டி.ஆர். அதுலா தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

சீனா மீது திரும்பிய ட்ரம்பின் கோபம்... ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு ரத்தாகும் என மிரட்டல் News Lankasri
