வவுனியாவில் சிறுவனை காணவில்லை: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
வவுனியாவில் சிறுவனை காணவில்லை என பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வவுனியா, இயங்கராவூர், கற்குளம், சாளம்பைக்குளத்தை சேர்ந்த ஜெயசீலன் அபிஷேக் என்ற 16 வயது சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
வீட்டில் நேற்றுமுன்தினம்(09.10.2025) காலை 04.30 மணியளவில் உறங்கிய மகனை காணாத நிலையில் அப்பகுதி முழுவதும் பெற்றோர் மற்றும் உறவினர்களால் அப்பகுதி முழுவதும் தேடியும் கிடைக்காத நிலையிலேயே சிறுவனின் பெற்றோரால் வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவுசெய்து தேடி வருகின்றனர்.
தொலைபேசி இலக்கம்
குறித்த சிறுவன் தொடர்பில் தகவல் ஏதும் அறிந்தால் சிறுவனின் தாயின் தொலைபேசி இலக்கம் 0761698019இற்கு அல்லது சிறுவனின் மாமாவின் தொலைபேசி இலக்கம் 0774909955 அழைத்து உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

சற்றுமுன் பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆன போட்டியாளர்! முதல் வாரத்திலேயே அதிர்ச்சி Cineulagam

சீனா மீது திரும்பிய ட்ரம்பின் கோபம்... ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு ரத்தாகும் என மிரட்டல் News Lankasri
