ஜனாதிபதித் தேர்தலில் ரணில் தொடர்பில் மொட்டுக் கட்சி முக்கியஸ்தர்களின் நிலைப்பாடு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
பக்குவமான பணியைச் செய்யக்கூடியவர் ஒரு நாட்டின் தலைவராக இருக்க வேண்டுமே தவிர தற்பெருமை பேசுபவராக இருக்கக்கூடாது என்றும் அமைச்சர் கூறினார்.
கம்பஹா மாவட்ட அரசியல் செயற்பாட்டாளர்களுடன் உடுகம்பொலவில் நேற்று (27) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
ஜனாதிபதித் தேர்தல்
“ஜனாதிபதித் தேர்தலுக்கு எமது கட்சி வேட்பாளரை முன்வைக்குமா என்ற உரையாடல் எழுந்தபோது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்போம் என்று கூறினேன்.
நாங்கள் ஜனாதிபதித் தேர்தலுக்கு எமது கட்சி வேட்பாளரை முன்வைக்குமா என்ற உரையாடல் எழுந்தபோது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்போம் என்று கூறினேன்.
நாங்கள் அனைவரும் 27 தேர்தல்களில் அவரை தோற்கடித்ததைப் போல, எங்களால் மட்டுமே அவரை வெற்றிபெறச் செய்ய முடியும். ஏன் அவரை வெற்றி பெற வைக்கிறோம்?
ஏனெனில் இந்த நாட்டிற்கு வலுவான பலமான அரசாங்கம் தேவை. மொட்டுக் கட்சியை உருவாக்கி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு அதிகாரத்தை கைப்பற்றிய எங்களுக்கு என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.
ரணில் விக்ரமசிங்க
அவ்வேளையில் எமது கட்சி உறுப்பினர்களைப் பாதுகாத்து அச்சமின்றி அரசியல் செய்வதற்குரிய சந்தர்ப்பத்தை ரணில் விக்ரமசிங்க அவர்களே உருவாக்கினார்.
அதை நான் பயப்படாமல் சொல்வேன். மே 9 அன்று நடந்த சம்பவத்தால் நாங்கள் ஆதரவற்ற நிலையில் இருந்தோம். அப்போது தற்போதைய ஜனாதிபதி ஜனாதிபதியாக பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே போராட்டத்தை அடக்கினார்.
முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபாய ராஜபக்சவும், மகிந்த ராஜபக்சவும் போராளிகளிடம் சிக்கியிருந்தால் இன்று நாம் அவர்களின் இறுதிச்சடங்குகளை செய்து முடித்திருப்போம்
நற்செய்தி சுவரொட்டி
அமரகீர்த்தி எம்.பிக்கு என்ன நடந்ததோ அதுவே எங்களுக்கும் நடந்திருக்கும். பேரவாவியில் இறங்கியவர்கள் இங்கு இருக்கிறார்கள். நற்செய்தி என்று நாடு முழுவதும் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.
அது IMF பற்றிய சுவரொட்டி. இதனால் எதிரணியினர் கவலையடைந்துள்ளன. 2023 மார்ச் 22 அன்று IMF முதல் காசோலையை வழங்கியபோது நாடு முழுவதும் வேலைநிறுத்த அலைகளை நாங்கள் எதிர் கொண்டோம்.
அன்று போலவே இன்றும் நடக்கின்றது. நாடாளுமன்றத்திற்கு தீ வைக்க முயற்சித்தவர்கள் இந்த நேரத்தில் நாட்டுக்கு கிடைத்திருக்கும் நற்செய்தியை எண்ணி எவ்வாறு கவலைப்படுகிறார்கள் என்பதை நீங்கள் தெளிவாக பார்க்க முடியும்.” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |