தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட கலந்துரையாடல்!
தேர்தல்கள் ஆணைக்குழு விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளது.
குறித்த கலந்துரையாடல் இன்றைய தினம் (16.03.2023) இடம்பெறும் என அண்மையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா அறிவித்திருந்தார்.
இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து இதுவரை எதுவித அறிவித்தல்களும் விடுக்கப்படவில்லை.
எனினும் , உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நிதி இதுவரை விடுவிக்கப்படாத நிலையில், எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நிதியமைச்சு அவதானம் செலுத்தவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே, வாக்குச் சீட்டு அச்சிடுவதற்குத் தேவையான தொகையை ஒதுக்குமாறு மீண்டும் திறைசேரிக்கு கடிதம் அனுப்பப்பட்டதாக அரசு அச்சகம் தெரிவித்துள்ளது.