பேருந்து மோதியதில் வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழப்பு
கண்டி - அலதெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புத்தளம் - கண்டி வீதியில் கிரந்தெனிய சந்தியில் பேருந்து மோதி வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்துச் சம்பவம் நேற்று(19) இடம்பெற்றுள்ளது.
கண்டி, கும்புரேகம பிரதேசத்தில் வசித்த 67 வயோதிபப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் விசாரணை
கட்டுகஸ்தோட்டையிலிருந்து குருநாகல் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தில் சென்ற மேற்படி வயோதிபப் பெண், பேருந்திலிருந்து இறங்கி வீதியைக் கடக்க முயன்றபோது அதே பேருந்து மோதியதில் படுகாயமடைந்துள்ளார்.
இதையடுத்து, தித்தபஜ்ஜல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் என்று அலதெனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், மேற்படி பெண்ணின் சடலம் கண்டி வைத்தியசாலையில் பிரேத பசிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் பேருந்தின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அலதெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
வயது உண்மை தெரிந்ததும் சரவணன் எடுத்த அதிரடி முடிவு, கதறி புலம்பும் மயிலு... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
வெண்ணிலா சொன்ன விஷயத்தை கேட்டு கடும் ஷாக்கில் கண்மணி, என்ன முடிவு எடுப்பார்.. அன்புடன் கண்மணி புரொமோ Cineulagam