ஏற்றுமதியில் முன்னிலை பெற்றுள்ள யாழ் மண்ணின் சிற்பங்கள்
சிற்பம் என்பது ஒரு முப்பரிமாணக் கலைப் பொருள் ஆகும். இது கடினமான அல்லது நெகிழ்வுத் தன்மை கொண்ட பொருள்களுக்கு உருவம் கொடுப்பது மூலம் உருவாக்கப்படுகிறது.
மனித நாகரிகத்தையும் அதன் வளர்ச்சிக் கூறுகளையும் எடுத்துக்காட்டும் சான்றுகளில் சிற்பக் கலை இன்றியமையாத ஒன்றாக உள்ள நிலையில் யாழ்ப்பாணத்திலுள்ள சிற்பக் கலைஞர் ஒருவர் தனது 30 வருட தொழில் அனுபவம் ஒன்றை குறிப்பிட்டுள்ளார்.
”சாதாரணமாக ஒரு சிலையை வடிவமைப்பதற்கு ஓரிரு நாட்கள் தேவைப்படும் நிலையில் சிலைகள் அளவில் கூட கூட அதற்கான காலம் கூடிக்கொண்டே செல்லும்.
இந்நிலையில் குறித்த சிற்பக் கலையை ஆரம்பிக்கும் போது சிற்பக்கலையை மேற்கொள்ள உள்ளவர் அதற்கு தன்னை முதலில் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த தொழிலில் சிறிய தவறு நேர்ந்தாலும் அந்த சிலையானது தேவையற்றதாக கருதப்பட்டு கழிக்கப்படும் சூழல் உருவாகும் என்றும் இந்த சிற்பங்கள் யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல வேறு பல மாவட்டங்களிலும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும்“ அந்த சிற்பி குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவான விடயங்களை இந்தக் காணொளியில் பார்வையிடலாம்..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |