ஜேர்மனியில் வேலை வாய்ப்பு என கூறி பண மோசடி: சந்தேக நபரொருவர் கைது
ஜேர்மனியில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபரொருவரை கந்தர பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறி்த்த கைது நடவடிக்கை கந்தர பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (19) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, பேலியகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணை
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், மாவட்ட நீதிபதி மற்றும்சட்டத்தரணி என்ற போர்வையில் ஜேர்மனியில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பல்வேறு நபர்களிடமிருந்து 24 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமாக மோசடி செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன், சந்தேக நபருக்கு எதிராக வாழைத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் மூன்று முறைப்பாடுகள் காணப்படுவதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 23 மணி நேரம் முன்

ஈஸ்வரியை சீக்ரெட்டாக வந்து சந்தித்த நபர், பிரச்சனையில் சிக்கப்போகும் குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

ஏர் கனடா விமான சேவை திடீர் ரத்து: பாதிப்பில் 130,000 பயணிகள்! பணியாளர்களின் கோரிக்கை என்ன? News Lankasri
