அநுராதபுரத்தில் பூ பறித்துக் கொண்டிருந்த மாமியார் - மருமகளுக்கு நேர்ந்த கதி
அநுராதபுரம் - விஹாரஹல்மில்லக்குளம் பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி மாமியார் உயிரிழந்துள்ளதுடன் மருமகள் காயமடைந்துள்ளதாக எலயாபத்துவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (21.01.2026) இடம்பெற்றுள்ளது.
உயிரிழப்பு
உயிரிழந்தவர் விஹாரஹல்மில்லக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 91 வயதுடையவர் ஆவார்.
வீட்டிற்கு முன்பாக உள்ள பூ மரத்தில் பூக்கள் பறித்துக்கொண்டிருந்த போது, அந்தப் பகுதிக்குள் நுழைந்த காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மாமியாரின் சத்தத்தை கேட்டு வீட்டிற்கு வெளியே சென்று பார்த்த மருமகளையும் காட்டு யானை பலமாக தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காட்டு யானை தாக்குதலில் காயமடைந்த மருமகள் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.