மக்கள் நினைப்பதை செயலில் காட்டுகின்றோம்! ஐ.நா. பிரதிநிதியிடம் பிரதமர் தெரிவிப்பு
ஐ.நா. அபிவிருத்தித் திட்டத்தின் பிரதிநிதி அலெக்சாண்டர் டி குரூவுடன் பிரதமர் ஹரிணி அமரசூரிய பேச்சு நடத்தியுள்ளார்.
இதன்போது இலங்கைக்கும், ஐ.நாவுக்கும் இடையிலான பலமான ஒத்துழைப்புக்கும், வெள்ள நிவாரணம் மற்றும் வாழ்வாதார உதவிகளில் ஐ.நா. வழங்கிய ஆதரவுக்கும் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்.
உலக பொருளாதார மன்ற மாநாடு
அத்துடன், நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் பிரதமர் விளக்கமளித்துள்ளார்.

"பொதுமக்களின் நம்பிக்கை, நல்லாட்சி மற்றும் நலிவடைந்த சமூகங்களுக்கான பலப்படுத்தப்பட்ட சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றின் ஊடாக தேசம் கட்டியெழுப்படும்.
மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் எமது அரசு கவனம் செலுத்தி வருகின்றது என்றும் ஐ.நா. பிரதிநிதியிடம் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
உலக பொருளாதாரமன்ற மாநாடு சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகின்றது. இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் முக்கியத்துவம்மிக்க சந்திப்புகளை நடத்தி வருகின்றார். இதன் ஓர் அங்கமாகவே மேற்படி சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது.




அண்ணன்கள் வீட்டில் ஏற்பட்ட அவமானம், அழுத கோமதிக்கு வந்த சந்தோஷ செய்தி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கொண்டாட்ட எபிசோட் Cineulagam
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கும் அதிர்ஷ்டம் கொண்ட டாப் 3 ராசியினர்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan